Recommendations
Recent Activity
மதுரை மாவட்டத்தில் 42 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தகவல்
மதுரை, ஜன. 24-
 
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலமாக 42 கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
 
முதல் கட்டமாக பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி நேரடி கொள்முதல் நிலையத்தினை தொடங்கி வைத்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது:-
 
விவசாய பெருங்குடி மக்கள் அரசு வழங்கியுள்ள அனைத்து நலத்திட்டங்களான பயிர் கடன், சொட்டு நீர் பாசனம் நெல் சேமித்து வைக்க கிடங்கு வசதி, விவசாய கூட்டு பொறுப்பு குழு உரம், பூச்சி மருந்து ஆகியவைகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் முழுமையாக பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் முழு பயன் அடையலாம் என்று கூறினார்.
 
விவசாயிகளுக்கு நேரடி கொள்முதலில் கீழ்க்கண்டவாறு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தூசி மணல் தூற்றி கொடுக்க வேண்டும் 1 குவிண்டால் ஏ ரகம் ரூ.1180-ம் 1 குவிண்டால் பொது ரகம் ரூ.1130-ம் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
 
நேரடி கொள்முதல் நிலையம் செயல்படுவதால் நிறைகுறைகள் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
 
மதுரை சரகம் துணைப் பதிவாளர் -98429 24015,
 
திருமங்கலம் துணைப் பதிவாளர் - 94420 56240,
 
மதுரை கூட்டுறவு விற்பனை சங்கம் - 0452-2605384,
 
உசிலம்பட்டி-கூட்டுறவு விற்பனை சங்கம் - 04552-252198.
 
இந்த தகவலை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.