திவாகரன் முன் ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
Chennai
செவ்வாய்க்கிழமை,
ஜனவரி 24,
3:09 PM IST
0
கருத்துக்கள்
சென்னை, ஜன. 24-
திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி தனது வீடு சசிகலாவின் தம்பி திவாகரன் தூண்டுதலின் பேரில் இடிக்கப்பட்டதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திவாகரன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். கஸ்தூரி தரப்பில் முன் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து முன்ஜாமீன் மனுமீதான விசாரணையை நீதிபதி 1 வாரகாலத்துக்கு தள்ளி வைத்தார்.
0
கருத்துக்கள்