வலங்கைமான், ஜன.23-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் தலைவர் மாஸ்டர் ஜெயபால் தலைமையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி துணை தலைவர் சத்யா குருமூர்த்தி, செயல் அலுவலர் மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜாகுமார், லதா ராதாகிருஷ்ணன், அருள்முருகன், ராஜராஜ சோழன், சேகர், தனலட்சுமி, சத்யமூர்த்தி, நூர்ஜஹான் ஜெகபர் அலி, மாரியம்மாள், குமார், தேவேந்திரன், சிவாஜி, மதுசூதனன், மூர்த்தி, சுமதி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வரும் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் குறித்து விளம்பர பலகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ராமர் சன்னதியில் மாற்றுத்திறனாளிக்கான சுகாதார வளாகம் அமைத்தல், வேலை செய்ய டெண்டர் கோரப்பட்ட டெண்டர்களை பரிசீலித்து அனுமதி வழங்கல் உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பேரூராட்சி துப்புரவு தொழிலாளிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.