Recommendations
Recent Activity
பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரம்பலூர், ஜன.22-
பெரம்பலூரில் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மேற்கு வானொலி திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவரும் நகராட்சி தலைவருமான ரமேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான ராமச்சந்திரன் வரவேற்றார்.
 
தொகுதி செயலாளர் ராஜேந்திரன் நகர துணை செயலாளர்கள் சந்திரா சுப்ரமணி பொருளாளர் ஜெகதீஸ்வரன் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தராஜ் குமார் செல்வமணி மகளிரணி மைதிலி அணி செயலாளர்கள் ரெங்கநாதன் மோகன் சிவக்குமார் ராஜா முகம்மது இக்பால் கவுன்சிலர்கள் தீபா பால்ராஜ் லோகநான் தமிழ்செல்வி லெட்சுமி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆற்றிய கட்சி பணி சேவைகள் நலத்திட்ட உதவிகள் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஆகியவை குறித்து பேசினர்.
 
இதில் மாவட்ட இணை செயலாளா ராணி மாவட்ட அணி செயலாளர்கள் ராஜேஸ்வரி வீரபாண்டியன் சாகுல் அமீது முருகேசன் ராவணன் தண்டபாணி அரணாரை ராமகிருஷ்ணன் குமார் குரும்பலூர் பேரூராட்சி துணை தலைவர் செந்தில்குமார் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
முடிவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பூபதி நன்றி கூறினார்.