Recommendations
Recent Activity
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே வாலிபர் பிணம்
சேலம், ஜன 22-

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் முட்செடிகளும் உள்ளது. இந்த இடத்தில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அறிந்த பொதுமக்கள் உடனே பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று வாலிபரின் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த வாலிபர் வேட்டி, சட்டை அணிந்துள்ளார். சட்டை காலரில் ஆர் என எழுதப்பட்டுள்ளது. சிறுநீர் கழிக்க இவர் முட்புதர் பக்கம் சென்ற போது ஜன்னி வந்து இறந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இவர் யார்? எந்த ஊர்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.