தென்ஆப்பிரிக்காவுடன் ஆக்கி: தொடரை கைப்பற்றியது இந்தியா
New Delhi
சனிக்கிழமை,
ஜனவரி 21,
8:27 AM IST
0
கருத்துக்கள்
புதுடெல்லி, ஜன.21-
இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆண்கள் ஆக்கி அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றியை சுவைத்தது.
இந்திய தரப்பில் யுவராஜ் வால்மிகி 2 கோலும், ரகுநாத், உத்தப்பா தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த 4 கோல்களும் பிற்பாதியில் அடிக்கப்பட்டவை ஆகும். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. கடைசி போட்டி நாளை நடக்கிறது.
0
கருத்துக்கள்