Recommendations
Recent Activity
பெண்கள் ஆக்கி: இந்திய அணிக்கு 3-வது வெற்றி
புதுடெல்லி, ஜன.19-
 
இந்தியா-அஜர்பைஜான் பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்தது.
 
இந்திய அணி தரப்பில் சுஷிலா சானு 3-வது நிமிடத்திலும், அனுராதா தேவி 22-வது நிமிடத்திலும், ரிது ராணி 67-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.