துபாய் டெஸ்ட்: 192 ரன்களில் இங்கிலந்தை சுருட்டிய பாகிஸ்தான்
Dubai
புதன்கிழமை,
ஜனவரி 18,
12:31 PM IST
0
கருத்துக்கள்
துபாய், ஜன 18-
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று காலை துவங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டன் ஸ்டிராஸும், அலைஸ்டார் குக்கும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியின் துவக்க வீரர்கள் மட்டுமின்றி முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான மேத் பிரையர் நிலைத்து நின்று ஆடி அணிக்கு ஸ்கோரை உயர்த்தினர். அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பிரையர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன் எடுத்திருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சயீத் அஜ்மல் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைபற்றினார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஹபீஸ் 22 ரன்களுடனும், தவ்பீக் உமர் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்துள்ளது. ஹபீஸ் 44 ரன்கள் எடுத்தும், தவ்பீக் உமர் 38 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.
0
கருத்துக்கள்