வருகிற 19-ந்தேதி திருவோணத்தில் சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
Tanjore
வியாழக்கிழமை,
ஜனவரி 12,
7:33 PM IST
0
கருத்துக்கள்
திருவோணம்,ஜன.12-
இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருவோணம் ஒன்றிய செயலாளர் கே.எம்.ராமசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவோணம் ஒன்றியம் பாதிரங்கோட்டை வடக்கு ஊராட்சி 2-வது வார்டு ஆதிதிராவிடர் தெரு சிமெண்ட் ரோடு பகுதியில் வடிகால் வசதி அமைக்கமுடியவில்லை. மழை காலம் உள்ளிட்ட நேரங்களில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் அசுத்தம் ஏற்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் இப்பகுதியில் வடிகால் வசதி அமைத்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் மனுக்கள் அளித்தும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இக்கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றிடக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 19-ந் தேதி திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட துணைச்செயலாளர் உத்திராபதி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0
கருத்துக்கள்