Recommendations
Recent Activity
உறையூர் ராமலிங்க நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
திருச்சி, ஜன.11-

உறையூர் ராமலிங்க நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. திருச்சி உறையூர் ராமலிங்கநகர் அருகே உள்ள அகமத்நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது40). இன்று காலை ராமலிங்க நகரில் கடைக்கு சென்றார்.அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

திடீர் என சரோஜா கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதன்மதிப்பு ரூ.1லட்சம் ஆகும். இதுகுறித்து சரோஜா உறையூர் போலீசில் புகார் செய்தார். மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகளை தேடிவருகிறார்கள்.