கிருஷ்ணவேணி பஞ்சாலை நாயகி நந்தனாவின் பேட்டி
தனபால் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. இப்படத்தில் கேரள நடிகையான நந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் நமது இணையதளத்திற்காக பேட்டி அளித்தார்.
 
கே: இப்படம் குறித்து..?
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழில் எனது முதல் படமாகும். இப்படத்தின் இயக்குனரான தனபால் பத்மநாபன் ரொம்ப யதார்த்தமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
 
கே: இப்படத்தில் உங்களது கேரக்டர் என்ன?
 
இப்படத்தில் எனது பெயர் பூங்கோதை. எனது தோழிகள் 'பூ' என்று கூப்பிடுவார்கள்.
 
கே: படத்தின் கதை என்ன?
 
சொல்லக் கூடாதுன்னு டைரக்டர் சொல்லி இருக்கார். பஞ்சாலையில் பணியாற்றும் மக்களின் யதார்த்தப் பதிவுதான் இப்படம். இதில் ஒரு காதல் கதையும் இருக்கு. இப்படத்தின் ஹீரோவான ஹேமச்சந்திரனுடனான லவ் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு.
 
கே: இப்படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
 
இப்படத்துல மொத்தம் 4 பாடல்கள். அதில் 'உன் கண்கள் கண்ணாடி' பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலாகும்.
 
கே: இப்படத்தின் கதை கோவை, உடுமலை பகுதியில் என்பதால் டயலாக் எல்லாம் எப்படி பேசினீங்க?
 
டயலாக்ஸ் எல்லாம் கோவை ஸ்லாங்குல இருந்துச்சி. என்னால சரியாவே சொல்ல முடியல. ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் டயலாக் பேசினேன். நல்லவேளை நான் டப்பிங் பேசல. அதனால தமிழ் ஆடியன்ஸ் தப்பிச்சாங்க..!
மதிப்பீடு செய்க