அழகியமண்டபம், ஜன. 6-
தக்கலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது குமரி மாவட்ட மாநாடு இன்று (6-ந்தேதி) காலை தொடங்கியது. வரவேற்பு குழு தலைவர் மாதவன் வரவேற்றார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகேசன், நிதி குழு கன்வீனர், சைமன் சைலஸ், நூர்முகம்மது, பெல்லார்மின், லீமாறோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளை (சனிக்கிழமை) காலையில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது வாழ்த்துரை வழங்குகிறார். பின்னர் புதிய மாவட்ட குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் நிறைவுரை ஆற்றுகிறார். வரவேற்பு குழு செயலாளர் சைமன் சைலஸ் நன்றி கூறுகிறார்.8-ந்தேதி மாலையில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகம்மது, மணி, ராமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா றோஸ், அண்ணாத்துரை, செல்லசுவாமி, செல்லப்பன், பொன்னுசாமி, கனகபாய், தங்கமோகன், அன்பரசன் உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்.
மாலையில் அழகிய மண்டபத்தில் இருந்து பிரமாண்ட செங்கொடி பேரணி நடைபெறுகிறது.