தியாகராயநகரில் விபசார விடுதி நடத்திய போலீஸ்காரர் 'சஸ்பெண்டு' || police suspended for prostitution conducted in tnagar
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
தியாகராயநகரில் விபசார விடுதி நடத்திய போலீஸ்காரர் 'சஸ்பெண்டு'
தியாகராயநகரில் விபசார விடுதி நடத்திய போலீஸ்காரர் 'சஸ்பெண்டு'
வில்லிவாக்கம், ஜன. 6-
 
சென்னை தியாகராயநகர் சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.  
 
இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு விபசார தடுப்பு போலீசார் அந்த பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக சுபா என்கிற நான்சி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
 
கைதான பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த அபார்ட்மெண்ட் வீட்டை மாதவரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் லீசுக்கு எடுத்து இருந்ததும் அவர் அயனாவரத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
 
அரிகிருஷ்ணன் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் அவருக்கும், கைதான சுபாவுக்கும் தொடர்பு இருந்ததும் லீசுக்கு எடுத்த வீட்டை அவரிடம் ஒப்படைத்து விபசார தொழில் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.  
 
இதையடுத்து அரிகிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி இதற்கான நடவடிக்கையை எடுத்தார்.
 
போலீஸ்காரர் அரிகிருஷ்ணன் 2008-ம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு போலீஸ்காரராக இருந்ததாகவும் அப்போது சுபாவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ரூ.256 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது அகல ரெயில்பாதை: ரெயில்வே மந்திரி அடிக்கல் நாட்டினார்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif