பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
Chennai
திங்கட்கிழமை,
ஜனவரி 02,
8:38 PM IST
0
கருத்துக்கள்
உப்பிடமங்கலம், ஜன.2
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கரூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அசோகன் மற்றும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பரமானந்தம் ஆகியோர் அறிவுறுத்தலின்படி கடவூர் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற குழந்தைகள் படிக்கும் பூலாம்பட்டி இணைப்பு மைய மாணவமாணவிகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
கல்வி சுற்றுலாவினை கடவூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தனம் தொடங்கி வைத்தார். மைய பொறுப்பாசிரியர் அஞ்சலம் அழைத்து சென்றார். இவர்கள் திருவானைக்காவல் கோவில், முக்கொம்பு, வயலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 18 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0
கருத்துக்கள்