தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்: ரோட்டில் சென்ற பெண்களுக்கு கட்டாய முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு || turicorin new year celebration foreign man kiss
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்: ரோட்டில் சென்ற பெண்களுக்கு கட்டாய முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு
தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்:
 ரோட்டில் சென்ற பெண்களுக்கு கட்டாய  முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள்- 
 பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு
தூத்துக்குடி, ஜன.1-
 
புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நள்ளிரவு தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு ஓட்டல்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தன. இது ஒருபுறம் இருக்க, இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வெடிவெடித்தும், வாகனங்களில் உலா வந்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
 
தூத்துக்குடியில் மதுகுடித்து புத்தாண்டை கொண்டாடிய வெளிநாட்டுக்காரர்கள் 3 பேர், ரோட்டில் நடந்து சென்ற பெண்களுக்கு கட்டாய முத்தம் கொடுத்ததால் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.
 
அதுபற்றிய விவரம் வருமாறு:-
 
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா நகரை சேர்ந்தவர்கள் ரோஸ் பிரான்சிஸ்(வயது48), ஜான் பிரான்சிஸ்(47). இவர்கள் உள்பட 3 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்தனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள், நேற்றிரவு புத்தாண்டை மதுஅருந்தி கொண்டாடியுள்ளனர்.
 
ஓட்டலில் மதுகுடித்த அவர்கள் உற்சாக மிகுதியால் ரோட்டுக்கு வந்தனர். தூத்துக்குடி- பாளை மெயின்ரோட்டில் குரூஸ் பெர்னாந்து சிலைக்கு கிழக்கே மெயின்ரோட்டில் ஆட்டம் போட்டனர். அப்போது அவர்கள் அவ்வழியாக ரோட்டில் நடந்து சென்ற பெண்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமின்றி வலுக்கட்டாயமாக அவர்களின் கன்னத்திலும், உதட்டிலும் முத்தம் கொடுத்தனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் அலறியபடி ஓடினார்கள். இதனை அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் பார்த்து ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் 3பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்களின் தர்மஅடி தாங்காமல் வெளிநாட்டுக்காரர்களில் ஒருவர் தப்பிஓடிவிட்டார்.
 
சகோதரர்களான ரோஸ் பிரான்சிஸ், ஜான்பிரான்சிஸ் ஆகிய இருவரும் பொது மக்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார்கள். பொதுமக்கள் தொடர்ந்து தாக்கியதால் அவர்கள் இருவரின் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வெளிநாட்டுக்காரர்கள் பொதுமக்களால் தாக்கப்படுவதை அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களிடம் இருந்து வெளிநாட்டுக்காரர்கள் 2பேரையும் மீட்டனர்.
 
பின்பு அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெளிநாட்டுக்காரர்கள் இருவருக்கும் போதை தெளியாததால் அவரிகளிடம் போலீசாரால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. போதை தெளிந்ததும் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தூத்துக்குடி