கரூர், டிச. 24-
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் கே. அம்மையப்பன் தனது சொந்த நிதியில் தனது தந்தை காராள கவுண்டர் நினைவாக ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய ஜெனரேட்டரை புலியூர் பேரூராட்சி வழங்கும் நிகழ்ச்சி புலியூரில் நடை பெற்றது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, தாந்தோணி ஒன்றிய செயலாளர் எம்.ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமி ரூ.3 லட்சம் மதிப்பில் உள்ள ஜெனரேட்டருக்கான சாவியை பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்க னிடம் வழங்கினார். இந்த ஜெனரேட்டரால் 20 ஹெச்.பி. மோட்டார் இயக்க முடியும். இதனால் இனி மின் தடைபட்டாலும் தடையில்லாமல் தண்ணீர் பம்பிங் செய்ய பிரச்சினை இருக்காது என்று செயல் அலுவலர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆர். ராமசாமி, அவைத்தலைவர் தங்கவேல், முன்னாள் செயலாளர் வேலுச்சாமி, தொழிற் சங்க செயலாளர் பழ.அப்பாசாமி, கவுன்சிலர் கள் பெருமாள், காந்தி பவா னந்தம், வளர்மதி, அன்ன பூரனம், பாலாமணி, பரிமளா, பால சுப்பிரமணி, தலைமை எழுத்தர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவரும் பேரூர் கழக செயலாளருமான கே. அம்மையப்பன் செய்திருந்தார்.