இலங்கையுடன் நாளை 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க வீரர் பிளாண்டர் காயம்
Durban
ஞாயிற்றுக்கிழமை,
டிசம்பர் 25,
11:47 AM IST
0
கருத்துக்கள்
டர்பன், டிச.25-
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 87 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டர்பனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பிளாண்டர் பயிற்சியின் போது முழங்காலில் காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட்டில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
பிளாண்டர் முதல் டெஸ்டில் 10 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். என்றாலும் அவர் உடல் தகுதி பெற்று நாளைய டெஸ்டில் விளையாடுவாரா என்று அணியின் மேலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாளைய டெஸ்டில் வெற்றி பெற்றால் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றும். தொடரை இழக்காமல் இருக்க இலங்கை அணி வெற்றி பெற கடுமையாக போராடும்.
0
கருத்துக்கள்