கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி சோதனைகளில் ரூ.18,700 கோடி சிக்கியது
New Delhi
சனிக்கிழமை,
டிசம்பர் 24,
11:34 AM IST
0
கருத்துக்கள்
புதுடெல்லி, டிச.24-
வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நாடெங்கும் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில்தான் பெரிய வணிக நிறுவனங்கள், பெரிய பணக்காரர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2010-11ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 2548 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அதுபோல கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் 2190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கடந்த 2 ஆண்டுகளில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.18 ஆயிரத்து 750 கோடி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இதுதவிர ஏராளமான சொத்து குவிப்பு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இனிவரும் நாட்களில் வருமான வரித்துறையின் திடீர் அதிரடி சோதனை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரி விதிப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் சோதனையிட செல்லும் முன்பு நன்கு ஆய்வு செய்த பிறகே செல்கிறோம். வரிஏய்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிறகே நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்றார். சோதனை என்ற பெயரில் தொழில் அதிபர்களை துன்புறுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்த அதிகாரி மறுத்தார்.
0
கருத்துக்கள்