Recommendations
Recent Activity
4 நாடுகள் ஆக்கி: இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
புதுடெல்லி, டிச.20-
 
4 நாடுகள் பெண்கள் ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள பாரனாவில் நடந்தது. இதில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்தது. இந்திய அணியில் ஜஸ்பிரீத் கவுர் (7-வது நிமிடம்), அனுராதா (58-வது நிமிடம்), வந்தனா காதரியா (68-வது நிமிடம்), ரிதுராணி (70-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
 
அயர்லாந்து அணி தரப்பில் அய்ன் கோனேரி 7-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.