Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
கண்டமங்கலம் அ.தி.மு.க தெருமுனை பிரசார கூட்டம், கண்டமங்கலம் வெயில் கொடுமைதொழிலாளி பலி, கள்ளக்குறிச்சி வாலிபர் கொலை, கள்ளக்குறிச்சி ஓடும் பஸ்நகை கொள்ளை, கள்ளக்குறிச்சி டீத்தூள் கடத்தல், கள்ளக்குறிச்சி மாணவி கடத்தல் திருமணம் போலீஸ் உறவினர்கள் புகார், குளிர்பான பாட்டில் கரப்பான் பூச்சி முட்டைகள் அதிகாரி வக்கீல் புகார், கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் தாலி கட்டும் நிகழ்ச்சி, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பூசாரிகள் தாலி நிகழ்ச்சி, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா அரவாணிகள், கொள்ளை, கொள்ளையர் போலீஸ் வேட்டை, சங்கராபுரம் தாய் தந்தை இளம்பெண் கடத்தல், லட்சம்
விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் கல்யாணசுந்தரம் இன்று ஆஜர்; கையெழுத்திட்டு சென்றார்
விழுப்புரம், டிச.19-
 
புதுவை எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கல்யாணசுந்தரத்தை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது கைது செய்யாமல் இருக்க சுப்ரீம் கோர்ட்டில் கல்யாணசுந்தரம் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அப்போது கல்யாணசுந்தரம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி விசாரணைக்கு ஒதுழைக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
 
இதையடுத்து திங்கட்கிழமை தோறும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.   அதுபோல் இன்று (திங்கட்கிழமை) கல்யாணசுந்தரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் காலை 10 மணிக்கு ஆஜரானார். ஆனால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தவில்லை.
 
இதையடுத்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு 10.10 மணிக்கு கல்யாணசுந்தரம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.