Recommendations
Recent Activity
பூந்தமல்லியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு: சிகிச்சை பெற்ற 12 பேருக்கு காலரா; பரிசோதனையில் உறுதியானது
சென்னை, டிச. 13-
 
பூந்தமல்லியின் பல்வேறு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி-வயிற்று போக்கு ஏற்பட்டது. அங்கு 9 நாட்களாக ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு பூந்தமல்லி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழாய் மூலம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, சின்டெக்ஸ் டேங்க்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் தேங்கி கிடந்த கழிவுநீரை மோட்டார் மூலம் வெளியேற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஸ் சட்டர்ஜி நடவடிக்கை எடுத்தார்.
 
துணை இயக்குனர் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு காலரா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி முல்லா தோட்டம், காந்தி நகர் பகுதியில் மேலும் 16 பேர் நேற்று வாந்தி - பேதி ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில் பலர் வீடு திரும்பி சென்றனர். தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இதில் 12 பேருக்கு காலரா பாதிப்பு இருப்பதாக டாக் டர்கள் தெரிவித்தனர். இது வரை 72 பேர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 46 பேர் வீடு திரும்பினர். நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
 
காலரா பாதிக்கப்பட்ட வர்களுக்கு “டிரிப்ஸ்” ஏற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கும் உறவினர்களுக்கும் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. “டாக்ஸி சைக்கிளின் மாத்திரை வீடு தோறும் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.