Recommendations
Recent Activity
முல்லை பெரியாறு அணை விவகாரம் மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை டிச 12-
 
முன்னாள் தமிழக பொதுப்பணித்துறை என்ஜினியர் விஜயகுமார் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தனது மனுவில், பெரியாறு அணையில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனை அகற்ற வேண்டும். பெரியாறு அணையில் பணியாற்றும் தமிழக பொதுப்பணித்துறையினர், அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு கே.என் பாஷா மற்றும் வேணுகோபால் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இந்த நோட்டீசுக்கு 4 வார காலத்திற்க்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.