Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அக்னி நட்சத்திரம்வேலூர் 108 டிகிரி வெயில், அணைக்கட்டு சிறுசேமிப்பு திட்டம் போஸ்ட்மேன் சஸ்பெண்டு, அதிகாரி முயற்சி மணல் கடத்தல் கும்பல் தனிப்படை அமைப்பு, அரக்கோணம் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ, அரக்கோணம் ரெயில் நிலையம் சரக்கு ரெயில் தடம் புரண்டது, அறிவியல் தேர்வு பிட் அடித்த மாணவர்கள் 3 பேர் சிக்கினர் 1 வருடம் தேர்வு எழுத தடை, ஆட்டோ டிரைவர் வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை, ஆம்பூர் திருவலம் திருப்பத்தூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் மறியல், ஆம்பூர் பாலிடெக்னிக் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை, ஆம்பூர் பெண் குழந்தை பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரி சிகிச்சை, ஆம்பூர் லாரி டிரைவர் கத்தி குத்தி நகை பணம் கொள்ளை, ஆஸ்பத்திரி சிலிண்டர் பெண் பலி பிரேத பரிசோதனை, இளம்பெண் தற்கொலை காதலன் வாக்குமூலம், இளம்பெண் தற்கொலை ஊராட்சி மன்ற தலைவர் தந்தை, இளம்பெண் விபசாரம் கும்பல் கைது
குழந்தை வரம் வேண்டி பெண்கள் நூதன பிரார்த்தனை; தீர்த்த குளத்தில் மூழ்கி தரையில் படுத்தனர்
வேலூர், டிச.11-
 
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடணுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகிறது. அடிமுடி காண முடியாமல் பொய் சொல்லி திருஅண்ணாமலையாரிடம் பெற்ற சாபத்தை பிரம்மா, மார்க்கபந்தீஸ்வரை பூஜித்து சாபவிமோசனம் பெற்ற திருத்தலம்.
 
கோவிலில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. இக்குளத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இத்தீர்த்த குளம் கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை இரவு 12 மணிக்கு திறக்கப்படும்.
 
இந்த தீர்த்த குளத்தில் குளித்தால் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறும், பேய், பிசாசு, பில்லிசூன்யம் பிடித்தவர்களுக்கு அகலவும் செய்யும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. முதலில் ஷீராநதி என்னும் பாலாற்றில் குளித்து விட்டு, கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து ஈர உடையுடன் மடியில் பூ பழம், தேங்காய் வைத்து கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால் அவர்களது கனவில் சிவபெமான் புஷ்பரூபத்தில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பதும் நம்பிக்கை.
 
மேலும் இக்கோவிலில் உள்ள சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் ஆகியவற்றில் நீராடினால் எல்லா வகை துன்பங்களும் அகலும் என்பது நம்பிக்கை. நேற்று இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலாறு, பிரம்ம தீர்த்தத்தில் நீராடிசிம்ம குளம் திறப்புக்காக காத்திருந்தனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளத்தை ரத்தனகிரி பாலமுருகனடிமை சாமிகள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பெண்கள் சிம்ம குளத்தில் புனித நீராடினர். பின்னர் ஈர துணியுடன் கோவில் வளாகத்தில் படுத்து பிரார்த்தனை செய்தனர்.