ஆத்தூர் யூனியன் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்கப்படும்: சேர்மன் தகவல்
Dindigal
சனிக்கிழமை,
டிசம்பர் 10,
7:10 PM IST
0
கருத்துக்கள்
செம்பட்டி, டிச. 10-
திண்டுக்கல் மாவட்டம் ஆத்து£ர் யூனியன் கவுன்சிலர் களின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் அ.தி.மு.க. சேர்மன் பி.கோபி தலைமை தாங்கி னார். துணைச் சேர்மன் இமாக்குலின் சர்மிலி முன் னிலை வகித்தார். ஆணையாளர் ஜோசப் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். முன்னதாக சேர்மன், துணைச்சேர்மன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களாக போட்டியிட வாய்ப்பு கொடுத்த, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் விசுவநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர் ஆத்தூர் க.நடராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஒன்றியத்தில் நலத்திட்டங்கள் நிறைவேற்றினால் மட்டுமே நன்றி தெரிவிக்க வேண்டுமென கூறினார்.
கூட்டத்தில் மணலு£ர் அ.தி.மு.க. கவுன்சிலர் வைரக் காள் பேசியதாவது:-
மணலூர் ஊராட்சியில் ரேசன் கடை மழைக்கு ஒழுகுகிறது. சாலை வசதிகள் சாக்கடை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார். தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் பேசினார்கள். கூட்டத்தில் சேர்மன் பி.கோபி பேசியதாவது:-
இலவச தொகுப்பு வீடுகளுக்கு கடந்த ஆட்சி காலத்தில் ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது, இந்த ஆட்சியில் ரூ.1 லட்சமாக உயர்த்தி கொடுக்கப்படுகிறது. எனவே பயனாளிகளை தேர்வு செய்யுங்கள். கடந்த ஆட்சியில்போல், கட்சி வேறுபாடுகள் பார்த்து, கவுன்சிலர்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படாது. அனைத்து கவுன்சிலர் களுக்கும் ஒரே மாதிரியாக, கிராம மக்கள் நலன் கருதி, திட்டப்பணிகள் செயல் படுத்த நிதி ஒதுக்கப்படும். உங்கள் கோரிக்கைகளை என்னிடம் நீங்கள் எப்போது வேண்டு மானாலும் தெரிவிக்கலாம். நான் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன் என பேசினார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சுப்பிரமணி நன்றி கூறினார்.
0
கருத்துக்கள்