திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் நகை
மாயமானதால் பரபரப்பு
Chennai
திங்கட்கிழமை,
டிசம்பர் 05,
4:19 PM IST
0
கருத்துக்கள்
ராயபுரம், டிச. 5-
ராயபுரத்தைச் சேர்ந்தவர் விஜய்பாபு (30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நதியாவுக்கும் நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணப்பெண் நதியா அணிந்திருந்த 35 பவுன் நகைகளை கழற்றி வைத்தார். சிறிது நேரத்தில் அந்த நகைகள் அனைத்தும் திடீரென மாயமானது.
இதையறிந்ததும் இரு வீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பெண் வீட்டார் நகை மாயமானதால் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்றும் கலக்கம் அடைந்தனர். ஆனால் மணமகன் வீட்டார் நகை திருட்டுத்தானே போய் இருக்கிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்து விடலாம். திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி விடுவோம் என்றனர்.
இதையடுத்து இன்று காலை மணப்பெண்ணிற்கு உறவினர்களின் நகைகள் அணிவிக்கப்பட்டு திருமணம் நடந்தது. பின்னர் நகை மாயமானது பற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0
கருத்துக்கள்