புதுவையில் ஆசிரியர் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
Puducherry
வியாழக்கிழமை,
டிசம்பர் 01,
11:04 AM IST
0
கருத்துக்கள்
புதுச்சேரி, டிச. 1-
புதுவை நெல்லித்தோப்பு குயவர்பாளையம் சாத்தாணி வீதியில் வசிப்பவர் ராமு. இவரது மனைவி வடிவுக்கரசி. இருவரும் ஆசிரியராக பணியாற்றுகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வடிவுக்கரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து குயவர் பாளையத்தல் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு வடிவுக்கரசிக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதில் முதலில் பிறந்த ஆண் குழந்தை 1 1/2 கிலோவும், 2-வது பிறந்த பெண் குழந்தை 2 கிலோவும், 3-வதாக பிறந்த ஆண் குழந்தை 1 கிலோ 300 கிராம் எடையும் இருந்தது.
3 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பிறந்திருப்பதை உறவினர்கள் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
0
கருத்துக்கள்