ஜனாதிபதி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு:
புறப்படுவதில் தாமதம்
Kolkata
புதன்கிழமை,
நவம்பர் 30,
2:48 PM IST
0
கருத்துக்கள்
கொல்கத்தா, நவ. 30-
ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த நாள் விழாவின் நிறைவு விழா கொல்கத்தா சாந்தி நிகேதனில் உள்ள விசுவபாரதி பல்கலைக்கழகத்தில் நடந்தது. அதில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் இன்று காலை அவர் கொல்கத்தாவில் இருந்து புனே புறப்பட்டார். காலை 10.20 மணிக்கு புறப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து விமானிகள் மற்றும் என்ஜினீயர்கள் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது `காக்பிட்' பகுதியில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து காலை 11.11 மணிக்கு அதாவது சுமார் 50 நிமிடம் தாமதத்திற்கு பிறகு கொல்கத்தா என்.எஸ்.சி. போஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது. அதில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் பயணம் செய்தார்.
0
கருத்துக்கள்