Recommendations
Recent Activity
ராஜபாளையம் அருகே தாய்க்கு விஷம் கொடுத்து கொலை செய்த மகன்
ராஜபாளையம்,நவ.21-
  
ராஜபாளையம் அருகே உள்ள கள்ளமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 40).இவரது மனைவி கிருஷ்ண வேணி(35),இந்த தம்பதிக்கு 10 வயதில் கிருஷ்ணன் என்ற மகன் உள்ளான்.
 
இந்த நிலையில் செல்வ ராஜ் கழுகுமலையை சேர்ந்த உறவுக்கார பெண்ணான மகேஷ்வரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.   இதனால் செல்வ ராஜிக்கும், கிருஷ்ண வேணிக் கும் இடையே தகராறு ஏற் பட்டுவந்ததாக கூறப்படுகிறது.
 
செல்வராஜின் தாயார் சீனியம்மாள்(65).இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் பேரன் கிருஷ்ணன் பெயருக்கு உயில் எழுதியதாக தெரிகிறது. இது பற்றி தகவல்அறிந்த செல்வராஜ் சொத்துக்களை என் பெயருக்கு எழுதி கொடுக்கும்படிகேட்டார்.
 
ஆனால் சீனியம்மாள் சொத்தை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது.   இந்த நிலையில் இன்று காலை கட்டிலில் சீனியம் மாள் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து கிருஷ்ண வேணி கீழ ராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார்.
 
அதில் சீனியம்மாளுக்கு, செல்வராஜ் விஷம் கொடுத்து கொலை செய்ததாக குறிப் பிட்டுள்ளார். அதன் பே ரில் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.