Recommendations
Recent Activity
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அத்வானி தலைமையில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை
புதுடெல்லி, நவ.21-
 
பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நாளை தொடங்குவதையொட்டி பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.   பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. அரசுக்கு எதிராக புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 
கறுப்பு பணம், பணவீக்கம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன. பாராளுமன்றம் மற்றும் மேல்-சபையின் பிரதான எதிர்க்கட்சியாக பாரதீய ஜனதா உள்ளது.
 
இந்த கட்சியின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது? என்பதற்கான யுக்தியை வகுக்க டெல்லியில் அத்வானி வீட்டில் இன்று மூத்த தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அத்வானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிதின்கட்காரி, எதிர்க்கட்சி தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, மேல்-சபை துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த் சின்கா, ரவிசங்கர் பிரசாத், சாந்தகுமார், அனந்தகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.