சைதாப்பேட்டையில் குழந்தையுடன் பெண் மாயம்
Chennai
வியாழக்கிழமை,
நவம்பர் 17,
5:52 PM IST
0
கருத்துக்கள்
சென்னை, நவ. 17-
சைதாப்பேட்டை கே.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (26). இவரது மகள் ஓவியாஸ்ரீ (5), கணவரை இழந்த கலைச்செல்வி குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி கலைச்செல்வி தனது குழந்தையுடன் விழுப்புரம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின்னர் திரும்பி வர வில்லை. உறவினர் வீட்டில் விசாரித்த போது அங்கும் செல்ல வில்லை என்று தெரிகிறது.
பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை. கலைச்செல்வி குழந்தையுடன் மாயமாகி இருப்பது தெரிந்தது. சைதாப்பேட்டை மசூதி லேன் பகுதியை சேர்ந்தவர் கம்ருதீன் (40). அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.
இது குறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
கருத்துக்கள்