சல்மான்பட், முகமது ஆசிப், ஆமீர் இங்கிலாந்தில் நுழைய 10 ஆண்டுக்கு தடை? || Salman Butt Mohammad Amir mohammad asif england ban
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
சல்மான்பட், முகமது ஆசிப், ஆமீர் இங்கிலாந்தில் நுழைய 10 ஆண்டுக்கு தடை?
சல்மான்பட், முகமது ஆசிப், ஆமீர் இங்கிலாந்தில் நுழைய
 
 10 ஆண்டுக்கு தடை?
லண்டன், நவ. 17-
 
ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது ஆமீர் ஆகியோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சல்மான்பட்டுக்கு 30 மாதமும், ஆசிப்புக்கு ஒரு வருடமும், அமீருக்கு 6 மாதமும் ஜெயில் தண்டனை விதித்து லண்டன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.  
 
சல்மான்பட், ஆசிப்பும் இங்கிலாந்தில் உள்ள ஜெயிலில் உள்ளனர். அமீருக்கு 19 வயதே ஆவதால் அவர் மட்டும் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ளார். தண்டனை காலம் முடிந்த பிறகு 3 பேரும் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள். தண்டனைக்கு பிறகு அவர்கள் இங்கிலாந்தில் நுழைய 10 ஆண்டுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
 
இந்த நிலையில் இங்கிலாந்து சிறையில் உள்ள அவர்களை பாகிஸ்தான் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். ஆனால் இருநாட்டு அரசுகள் தான் இந்த விஷயத்தில் முடிவு செய்ய இயலும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த 3 பேருக்கும் எந்தவித உதவியும் செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் அரசும் இந்த விஷயத்தில் தலையிடாது என்று தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சவாலான அணியாக இருக்கும்: வாட்சன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நேற்று அளித்த பேட்டியில், ‘20 ஓவர் உலக ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif