Recommendations
Recent Activity
டெஸ்ட் சாம்பியன் போட்டி இல்லை; ஐ.சி.சி. முடிவு ஏமாற்றம் அளிக்கிறது -தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித்
ஜோகன்ஸ்பர்க், நவ. 17-
 
டெஸ்ட் சாம்பியன் போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஏற்கனவே முடிவு செய்து இருந்தது. 2013-ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன் போட்டி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு முன்பு வரை டெஸ்ட் சாம்பியன் போட்டியை அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என்று ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கட் சமீபத்தில் அறிவித்தார்.
 
டெலிவிசன் ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர் காரணமாக ஐ.சி.சி. சாம்பியன் போட்டி 2013-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு தென்ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் சுமித் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
ஐ.சி.சி.யின் இந்த முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஐ.சி.சி.யின் இந்த முடிவு சரியானது அல்ல என்று தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன். ஸ்பான்சர் காரணத்தை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக 5 ஆண்டுகள் வரை தள்ளி வைப்பது என்பது நீண்ட காலம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
 
தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.