Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
80 அடி சாலை எதிர்ப்பு ஈரோடு கலெக்டர் முற்றுகை கிறிஸ்தவர், அந்தியூர் பர்கூர் வனப்பகுதிமழை, அந்தியூர் வனப்பகுதி விவசாயி மிதித்து யானை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர், அம்மாபேட்டை தொழிலாளி தற்கொலை, அரச்சலூர் அம்மன் கோவில் தேரோட்டம், அரச்சலூர் அம்மன் கோவில் குண்டம் விழா, அரசு ஆஸ்பத்திரி டீன் மனைவி ரெயில் தற்கொலை, அலுவலகம், இன்று, இளைஞர் காங்கிரஸ் மோதல் அடிதடிவாக்குவாதம், ஈரோடு கலெக்டர் அலுவலகம் கேண்டீன் பணம் திருட்டு, ஈரோடு நகைகள் கொள்ளை கொள்ளையர்கள் அட்டூழியம், ஈரோடு ரெங்கம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஈரோடு ரெயில் நிலையம் ரெயில் என்ஜின்கள் மோதல், எழுமாத்தூர் முத்தையன் வலசு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கருணாநிதியின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஜெயிலுக்கு செல்வார்கள்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பேச்சு
ஈரோடு, நவ. 12-
 
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரப்பாளையம் ஊராட்சியில் 2-வது கட்டமாக தோட்டாணி சத்திரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடை பெற்றது.
 
விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராம லிங்கம் கலந்து கொண்டு 223 பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
 புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று திட்டங்கள் தீட்டினார். அவர் வழியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் தாழ்த்த பட்ட, அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல விலையில்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
 
ஆனால் கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர் தனது குடும்பத்தினரின் நலனை மட்டுமே பார்த்துக் கொண்டார். அதனால் தான் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். கருணாநிதியின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஜெயிலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
 
எனவே ஊழல் ஆட்சியை தூக்கி எறிந்த உங்களுக்கு நன்றியை தேரிவித்து கொள்கிறேன். தமிழக முன்னேற்றத் திற்காக பாடுபடும் ஜெயலலி தாவுக்கு உறுதுணையாக இருங்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.