விமான பயண முறைகேடு: கிரண்பெடி பற்றி கெஜ்ரிவால் புகார்
New Delhi
வெள்ளிக்கிழமை,
நவம்பர் 11,
9:41 PM IST
0
கருத்துக்கள்
புதுடெல்லி, நவ.11-
அன்னாஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
அதுபோல, உயர் வகுப்பில் விமான பயணம் மேற்கொண்டதாக கிரண்பெடி மீது புகார் கூறப்பட்டது. கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து அந்த இயக்கத்தை சேர்ந்த அரவிந்த கெஜ்ரிவால், தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில், ``இது போன்று அவர் செய்திருக்க கூடாது. மீண்டும் இத்தகைய தவறு நடைபெறாது என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் கிரண்பெடி செய்தது, தொழில் நுட்ப தவறு மட்டுமே.
அந்த தவறின் மூலமாக, தனிப்பட்ட முறையில் எந்தவித பண ஆதாயத்தையும் அவர் பெறவில்லை. அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர்கள் மீது அவதூறு பரப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. அன்னா ஹசாரேயை எங்களிடம் இருந்து பிரிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது'' என்றார்.
0
கருத்துக்கள்