Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அமைச்சர் பச்சைமால் பொதுமக்கள் பாராட்டு, ஆக்சிஜன் சிலண்டர் பலி ருக்மணி உடல் அடக்கம், ஆக்சிஜன் சிலிண்டர் கோமா நிலை பெண் சாவு, ஆக்சிஜன் சிலிண்டர் ருக்மணி உடல் பிரேத பரிசோதனை ஐகோர்ட் மனு, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பச்சிளம் பெண் குழந்தை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டாக்டர் செக்ஸ் புகார் மாணவர்கள் போராட்டம் விசாரணை, ஆட்டோ, ஆரல்வாய்மொழி, ஆறுகாணி பள்ளி வகுப்பு மாணவி சில்மிஷம் மலையாளம் ஆசிரியர் கைது, இன்டர்நெட் காதல் மாணவி லீலை சென்னை மாணவர் போலீஸ், இரணியல் மோட்டார் சைக்கிள் விபத்து தொழிலாளி பலி, இளம்பெண் மாமனார் தர்ணா, உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி சித்திரை தேரோட்டம், உல்லாசம் ராணுவ வீரர் மனைவி விசாரணை, என்ஜினை திருடியவர் கைது
கார்டுகளை ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் பாகோடு ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகை
மேல்புறம், நவ.10-
 
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்கி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் மொத்தம் 950 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் முதலில் வரும் கார்டுகளுக்கு மட்டுமே மண்எண்ணை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் மண்எண்ணை வினியோகிக்கும் நாளில் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த மாதம் வினியோகம் செய்வதற்கான மண்எண்ணை நேற்று இரவு வந்தது.
 
இதையறிந்த பொது மக்கள் மண்எண்ணை வாங்க பதிவு செய்வதற்காக 500-க்கும் மேற்பட்ட கார்டுகளை அடுக்கி வைத்தனர். இதுபற்றி அறிந்த வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தி கார்டுகள் அனைத்தையும் எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
 
பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட வழங்கல் அதிகாரிகள் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ரேஷன் கார்டுகள் பொதுமக்களிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டு மண்எண்ணை வினியோகம் நடந்தது.