டீசல் விலையும் விரைவில் உயரும் || Diesel prices Rapidly rising
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
டீசல் விலையும் விரைவில் உயரும்
டீசல் விலையும்
 
 விரைவில் உயரும்
சென்னை, நவ. 6-
 
சென்னையில் நேற்று நடந்த வங்கிகள் கருத்தரங்கில் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் கலந்து கொண்டு பேசினார்.
 
அவர் கூறியதாவது:-
 
டீசலும் மற்ற பொருள் மாதிரி தான். எனவே சர்வ தேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடமே விட்டு விட வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை. உரிய நேரத்தில் தான் அதற்கான முடிவை எடுக்க முடியும். அதற்கு பண வீக்கம் குறைய வேண்டும். 
 
தற்போது பணவீக்கம் மிக அதிகமாக உள்ளது. அடுத்த மாதம் இந்த நிலை மாறும். ஜனவரியில் பணவீக்கம் குறையத் தொடங்கும். மார்ச் மாதத்துக்குள் பண வீக்க விகிதம் 7 சதவீதமாக நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சமயத்தில் டீசல் விலை நிர்ணய கொள்கையில் மாறுதல் செய்யப்படும்.
 
இவ்வாறு பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் கூறினார்.
 
டீசல் விலை நிர்ணய உரிமையை எண்ணை நிறு வனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உடனடியாக டீசல் விலை உயரும். எனவே இன்னும் 2 மாதத்தில் டீசல் விலை மிக கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழகத்தில் உணவு தானியம் கையிருப்பு: இந்திய உணவு கழகம் அறிவிப்பு

இந்திய உணவு கழகம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif