Recommendations
Recent Activity
கறுப்பு பணத்துக்கு எதிராக ஜி-20 மாநாட்டில் கூட்டு பிரகடனம்: மன்மோகன்சிங் வரவேற்பு
கேன்ஸ், நவ.5-
 
பொருளாதாரத்தில் முன்னேறிய 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, பிரான்சு நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது.
 
 அதில், கறுப்பு பணத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த கூட்டு பிரகடனத்தில், வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடியை தடுக்க, கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
அப்படி ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
 இந்த பிரகடனத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.