Recommendations
Recent Activity
162 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் விரைவு கோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடெல்லி, நவ. 4-
 
பாராளுமன்ற எம்.பி.க்களில் 162 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நாடெங்கும் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கின்றன.   எம்.பி.க்கள் மீதான வழக்கு என்பதால் வழக்கு விசாரணை மெல்ல நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தேர்தல் கமிஷனர் ஜெ.எம்.லிங்டோ சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில் எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் கவனிக்கப்படாமல் உள்ளன. அந்த வழக்குகளை அதிவிரைவு கோர்ட்டுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தி முடிந்து தீர்ப்பு கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த பொதுநல மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், எல்லா மாநிலங்களிலும் அதிவிரைவு கோர்ட்டுகள் உள்ளன. இந்த கோர்ட்டுக்களில் 162 எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை சேர்த்து விசாரணை நடத்தலாம். இது பற்றி மத்திய அரசு கருத்து தெரிவிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.