ரா. ஒன்
இந்தியில் இருந்து தமிழில் வந்துள்ள ஷாருக்கான் படம். வீடியோ கேம் தயாரிப்பு வல்லுனர் ஷாருக்கான். அவர் மகனுக்கு வீடியோ கேம் விளையாட்டுகளில் பைத்தியம். மகனுக்காக புதிய சாப்ட்வேரில் “ரா. ஒன்” என்ற வில்லனையும் “ஜி.ஒன்” என்ற ஹீரோவையும் உருவாக்குகிறார்.
 
சோதனை முயற்சியில் ஷாருக் மகனே விளையாடுகிறான். இரு கட்டங்களின் வென்றுவிட்டு பாதியில் விளையாட்டை முடித்துவிட்டு வெளியேறுகிறான். அப்போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வீடியோ கேமில் உள்ள வில்லன் “ரா.ஒன் உயிர் பெற்று ஷாருக் மகனை கொல்ல வெளிவருகிறது. அதனை தடுக்க ஜீ. ஒன்னும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இரு எந்திரங்களுக்கும் நடக்கும் ஆக்ஷன் போராட்டம் மீதி கதை.
 
ஹாலிவுட்டுக்கு இணையாக நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்ப உத்திகளில் விறுவிறுப்பாக கதை நகர்கிறது. ஷாருக்கான் பாசக்கார தந்தையாகவும் மகனை காப்பாற்ற போராடும் எந்திரனாகவும் இருகெட்டப்பில் கலக்குகிறார். அவர் பாதியில் கொல்லப்பட்ட பிறகு கதையோட்டம் எந்திரன் ஷாருக்மேல் பயணிக்கிறது.
 
தாவுதல், குதித்தல், அதிரடியாக தாக்குதல் என பரபரக்கிறார். அதிவேக ரெயிலும், அது ரோட்டில் வந்து கட்டிடங்கள் இடிபடுவதும் மிரட்சி. தொழில் நுட்ப கோளாறில் எந்திர வில்லன் வெளியே குதிப்பது லாஜிக் இல்லாதது. கரீனாகபூர் நாயகி, ரஜினி எந்திரனாக வந்து வில்லன்கள் ஆயுதங்களை இழுக்கும் சீன் கை தட்டல். வீடியோ கேம் பிரியர்களுக்கு விருந்து.
மதிப்பீடு செய்க