சேலம் மாநகரில் 4மாதத்திற்குள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன்:
புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுண்டப்பன் பேச்சு
Salem
சனிக்கிழமை,
அக்டோபர் 22,
4:35 PM IST
0
கருத்துக்கள்
சேலம், அக்22-
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் சவுண்டப்பன் வெற்றி பெற்றார். இவர் 1,92,866 வாக்கு பெற்று வெற்றி பெற்று இருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் எஸ்.டி.கலையமுதன் 97,793 ஓட்டு பெற்று இருந்தார். சவுண்டப்பன் 95ஆயிரத்து 73 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி இருந்தார்.
இதையடுத்து இவரும், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான எம்.கே.செல்வராஜூ, சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஜி.வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் சேலம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் புதிய மேயராக தேர்வு பெற்ற எஸ்.சவுண்டப்பன் பேசியதாவது:-
பொதுமக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள். இதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சேலம் மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகளும் பெற்று தருவேன். குறிப்பாக குடிநீர் பிரச்சினை 4 மாத காலத்திற்குள் முடித்து தருவேன். இதன் பின்னர் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படும்.
பொதுமக்கள் எப்போதும் என்னை சந்திக்கலாம். அவர்களின் குறைகள் கேட்டு அதை நிவர்த்தி செய்து அவர்களுக்கு 24மணி நேரமும் உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0
கருத்துக்கள்