மன்னார்குடியில் துணிகரம்:நடந்து சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு
Chennai
புதன்கிழமை,
அக்டோபர் 12,
2:45 PM IST
0
கருத்துக்கள்
மன்னார்குடி, அக்.12-
மன்னார்குடியில், நடந்து சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் செயினை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மன்னார்குடி நடராஜபிள்ளை தெருவை சேர்ந்தவர் ராதா(வயது34). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ஆசிரியை ராதா நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென ராதாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50ஆயிரம் ஆகும். இது குறித்து ஆசிரியை ராதா, மன்னார்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0
கருத்துக்கள்