மாநில கட்சிகள் அங்கீகாரம் பெற தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் மாற்றம்: எஸ்.ஒய்.குரேஷி
New Delhi
புதன்கிழமை,
அக்டோபர் 12,
1:10 AM IST
0
கருத்துக்கள்
புதுடெல்லி, அக்.12-
மாநில அளவிலான கட்சிகள், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் எளிமைப்படுத்தி மாற்றி அமைத்து உள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி கூறியதாவது:-
மாநில கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்ற எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் 8 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தால் அந்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் வழங்கப்படும்.
இதன் மூலம் அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.
0
கருத்துக்கள்