தஞ்சை நகர சபை தலைவர் அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம் || Tanjore city council leader ADMK candidate campaign
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
தஞ்சை நகர சபை தலைவர் அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம்
தஞ்சை நகர சபை தலைவர் 
 
 அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம்
தஞ்சாவூர், அக்.8-
 
தஞ்சை நகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சாவித்திரிகோபால் தஞ்சை 8-வது வார்டு கொடிமரத்து மூலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகம் செய்து வாக்குகளை சேகரித்தார்.
 
அதைத்தொடர்ந்து 8-வது வார்டு , 15-வது வார்டு, 25-வது வார்டு , 20-வது வார்டு , 21-வது வார்டுகளில் சாவித்திரி கோபால் காலை முதல் இரவு வரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரசாரத்தில் தஞ்சை தொகுதி செயலாளர் துரை.திருஞானம், தஞ்சை நகர செயலாளர் பண்டரிநாதன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோபால். எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி அசோக், பொருளாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
பிரசாரத்தின் போது ஜெயலலிதா அறிவித்துள்ள அனைத்து நலதிட்டங்களும் உடனே கிடைக்கும். சாலை வசதிகள்,வடிகால் வசதி, மற்றும் தூய்மையான குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதி செய்து தருவேன்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif