Recommendations
Recent Activity
சாரண- சாரணியர் பொதுச்சேவைக்கு தயாராக இருக்க வேண்டும்: மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சுமி பேச்சு
அரியலூர், செப்.10-
 
அரியலூர் கல்வி மாவட்ட பாரத சாரண- சாரணியர் இயக்கம் சார்பில் 2011-2012-ம் ஆண்டிற்கான படைப்பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணம் செலுத்துதல் தொடர்பான ஒரு நாள் சாரண- சாரணிய ஆசிரியர்கள் கூட்டம் அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
 
முன்னதாக மாவட்ட பொருளாளர் புலவர் சி.இளங்கோ அனை வரையும் வரவேற்றார். மாவட்ட ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி பேசுகையில் நடந்து முடிந்த இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாமில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொரு பள்ளியிலும் திங்கட்கிழமை மாலை சாரண- சாரணிய இணைச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும்.
 
சாரண- சாரணியர்கள் மற்ற மாணவர் களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் அதற்கு ஆசிரியர்கள் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று கூறினார். சாரண- சாரணிய இயக்கத் தின் அரியலூர் மாவட்டத் துணைத்தலைவர் மற்றும் கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கோவிந்தசாமி பேசுகையில் கூட்டுக்குடும்பம் என்ற நிலை மாறி தனிக்குடும்பம் என்று ஆகி மாணவ- மாணவிகள் சிறுவட்டத்திற்குள் வாழ்கிறார்கள்.
 
சாரண-சாரணியர் இயக்கம் அவர்களுக்கு பரந்த மனப்பான்மையையும், பிறருக்கு உதவிவேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சாரண- சாரணிய ஆசிரியர் களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி ஆசிரியர் தின வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொண்டார். கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் மாவட்ட துணை ஆணையர் மற்றும் ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.சின்னத்துரை பேசுகையில் சாரண- சாரணிய பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மாவட்ட செயலாளர் மற்றும் கிழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் வளையாபதி ஆண்டறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் இளங்கோ நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
 
மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணியர்)லீலாஜெபராணி ஆண்டு செயல்திட்டத்தை விளக்கினார். உடையார்பாளையம் கல்வி மாவட்ட அமைப்பு ஆணையர் மாநில பயிற்றுனர் மற்றும் தளவாய் அரசு உயர்நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் சோ.சக்திவேல் படைப்பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக விண்ணப்பிப்பது மற்றும் படை நடத்த அனுமதி ஆணை பெறுவது பற்றி எடுத்துக்கூறினார்.
 
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காட்டுப்பிரிங்கியம் சாரணிய ஆசிரியை லதா, நாகமங்கலம் சாரணிய ஆசிரியை பூங்குழலி, சாரண ஆசிரியர் பாஸ்கர் தூயமேரி உயர்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் பீட்டர், ஆரோக்கிய தாஸ், திருமானூர் அரசு உயர் நிலைபள்ளியின் சாரண ஆசிரியர் லட்சுமணன், மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணர்) முருகேசன், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சாரண ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாவட்ட செயலாளர் வளையாபதி நன்றி கூறினார்.