Recommendations
Recent Activity
தே.மு.தி.க. சார்பில் போட்டி; கோவை மேயர் பதவிக்கு தமிழ்முருகன் விருப்ப மனு
கோவை, செப். 9-
 
தே.மு.தி.க. சார்பில் கோவை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் விருப்ப மனு கொடுத்தார். கோவை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் கடந்த சில தினங்களாக விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
 
போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினர் மாநகர் மாவட்டத்தில் செயலாளர் தமிழ்முருகன், மாநில கைத்தறி பிரிவு துணை செயலாளர் விஜய் ஈஸ்வரன் ஆகியோரிடமும், வடக்கு மாவட்டத்தில் செயலாளர் பாண்டியன், பொருளாளர் முரளி ஆகியோரிடமும் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் மனு கொடுத்தார்.
 
அது போல கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். அவரது மனைவி திலகவதி, மகளிரணி சாவித்திரி யுவராஜன், இளைஞரணி செயலாளர் முத்துகுமரன், அவை தலைவர் எம்.எஸ்.எம். தங்கவேல் வர்த்தகர் அணி செயலாளர் கே.ஆர். ராஜா ஆகியோரும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
 
வடக்கு மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியனிடம் வடவள்ளி நகர செயலாளர் துரை ராஜன், இளைஞரணி துணை செயலாளர் வடவள்ளி விஜய், மாவட்ட பிரதிநிதி செல்வலிங்கம், எஸ்.எம். முருகன் ஆகியோர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.