சென்னை, செப். 9-
சென்னை ஐகோர்ட்டில் பெண் வக்கீல் விஜயலட்சுமி தாக்கல் செய்த பொதுநல மனு வில் கூறி இருப்பதாவது:-
தகவல் அறியும் சட்டத்தில் இருந்து சி.பி.ஐ.க்கு மத்திய அரசு முழு விலக்கு அளித்து அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. சி.பி.ஐ. ஒரு புலனாய்வு அமைப்பு. ஏற்கனவே சி.பி.ஐ. இடம் இருந்து ஒருசில தகவல்களை பெற, தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை அறிய முழு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அறிவதில் இருந்து இந்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது சி.பி. ஐ.க்கு முழு விலக்கு அளித்தது தவறு. மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு சி.பி.ஐ. சார்பில் இன்று பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
சி.பி.ஐ. பாதுகாப்பு தொடர்பான பல வழக்குகளை விசாரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை தெரிவிப்பது ஆபத்தானது. எனவே தகவல் அறியும் சட்டத்தின்படி தகவல் தெரிவிப்பதில் இருந்து சி.பி.ஐ.க்கு மத்திய அரசு முழுவிலக்கு அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், திருஞானம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சி.பி.ஐ.க்கு தகவல் அறியும் சட்டத்தில் இருந்து முழுவிலக்கு அளித்தது தவறு என்று வக்கீல் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
நாட்டின் பாதுகாப்பை கருதி மத்திய அரசு சி.பி.ஐ.க்கு விலக்கு அளித்து இருப்பது சரியானது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து உள்னர்