Recommendations
Recent Activity
சென்னையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை, செப். 9-
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
 
நேற்று முதல் இன்று காலை 8 மணி வரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 8 செ.மீட்டர் மழை பெய் துள்ளது. சென்னை, பூந்த மல்லியில் 2 செ.மீ., தாம்பரத்தில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.