புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் துணிகர கொள்ளை; எம்.எல்.ஏ. விடுதியில் கைவரிசை || puthiya tamilagam katchi dr.krishnaswamy mla hall robbery
Logo
சென்னை 01-02-2015 (ஞாயிற்றுக்கிழமை)
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் துணிகர கொள்ளை; எம்.எல்.ஏ. விடுதியில் கைவரிசை
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் 
 
 துணிகர கொள்ளை;
 
 எம்.எல்.ஏ. விடுதியில் கைவரிசை
சென்னை, ஆக. 27-
 
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபை கூட்ட தொடரில் பங்கேற்று வரும் இவர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியுள்ளார்.   அவருடன் அவரது மகனும் தங்கி இருக்கிறார். இன்று காலையில் டாக்டர் கிருஷ்ணசாமி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தார். அறையில் அவரது மகன் தூங்கிக் கொண்டிருந்தார்.
 
இந்த நேரத்தில் யாரோ கிருஷ்ணசாமியின் அறையில் புகுந்து, அவரது சூட்கேஸ் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர். நடைபயிற்சி முடிந்து திரும்பி வந்து பார்த்த கிருஷ்ணசாமி சூட்கேசையும், செல்போனையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
 
இதுகுறித்து அரசினர் தோட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சூட்கேசில், ரூ. 75 ஆயிரம் பணமும், சட்டசபையில் பேச வேண்டிய குறிப்புகளும் இருந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணசாமியின் அறை கதவு திறந்து கிடந்துள்ளது. அப்போது தான் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தனது தவறுகளை மறைப்பதற்காக ஜெயந்தி நடராஜன் மீது காங்கிரஸ் ஊழல் புகார் கூறுகிறது: வெங்கையா நாயுடு தாக்கு

தனது தவறுகளை மறைப்பதற்காக ஜெயந்தி நடராஜன் மீது காங்கிரஸ் ஊழல் புகார் கூறுகிறது என்று மத்திய ....»