Recommendations
Recent Activity
பெரம்பலூர் நகராட்சியில் 8 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகள் துண்டிப்பு
பெரம்பலூர், ஆக.5-
 
பெரம்பலூர் நகராட்சியில் 4ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 400-க்கும்மேற்பட்ட குடிநீர் இணைப்புகளில் கடந்த 2004-05 ஆம் ஆண்டு முதல் கட்டிட உரிமையாளர்கள் சிலஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.
 
ஏறத்தாழ ரூ.56 லட்சம் குடிநீர் கட்டண பாக்கி உள்ள நிலையில் குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தாதவர்க ளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறு நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா மற்றும் நகர்மன்ற தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
 
  அதில் முதல் கட்டமாக கடந்த ஜுன் மாதத்தில் பெரம்பலூர் மேட்டுத்தெரு, கம்பன் தெரு பகுதிகளில் சில ஆண்டுகளாக குடிநீர் கட் டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப் புகள் துண்டிக்கப்பட்டன.
 
இதனைத்தொடர்ந்து ராசா, அப்லோசன், மகேஸ்வரன், குழாய் பொருத்துனர் குமார் வருவாய் உதவியாளர் சாமிக் கண்ணு, பணியாளர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் புறநகர் 8-வது வார்டில் உள்ள புதுக்காலனியில் பள்ளிவாசல் தெருவில் 8ஆண்டுகளாக தலா ரூ.7500 குடிநீர் இணைப்புக் கட்டணம் பாக்கி வைத்துள்ள 20 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண் டித்தனர்.
 
 பெரம்பலூர் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனே வரி மற்றும் கட்டணங் களை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தெரிவித்துள்ளார்.