மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ1500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் இன்று கைது
Salem
வெள்ளிக்கிழமை,
ஜூலை 29,
6:57 PM IST
0
கருத்துக்கள்
வாழப்பாடி, ஜூலை.29-
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் விவசாயி.அவரது கூரை வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக திருமனு£ரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை அணுகினார். அங்கு வணிக உதவியாளராக பணிபுரிந்து வரும் சசிகுமார் என்பவர் மின் இணைப்பு கொடுக்க ரூ1500 லஞசம் வேண்டும் என்று கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி மாணிக்கம் இது குறித்து சேலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள முருகேசன், ரங்கராஜூ மற்றும் போலீசார் இன்று காலை விவசாயி வீட்டுக்கு சென்றனர்.
அங்கு ரூ1500 லஞசப் பணத்தை வாங்கிய மின் வாரிய வணிக உதவியாளர் சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.அவரை மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0
கருத்துக்கள்